சொந்த மண்ணில் எங்களை தோற்கடிக்க முடியாது : வங்கதேச ஆல்ரவுண்டர் சாஹிப் கருத்து..!

334

சொந்த மண்ணில் வங்கப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று வங்க தேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 27ஆம் தேதி டாக்கா மைதானத்தில் தொடங்குகிறது. இந்தநிலையில் சொந்த மண்ணில் வங்கப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று கூறியுள்ள வங்க தேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன், தங்கள் நம்பிக்கையில் குறைவு இல்லை என கூறியுள்ளார்.