தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்படும் : அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவிப்பு

233

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்படும் என அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா சீறும் சிறப்புமாக நடக்க அனைத்து நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என்ற தீர்மானம் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.