தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள், ஜிஎஸ்டி மசோதா குறித்து ஆலோசனை !

303

தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், ஜிஎஸ்டி மசோதா தாக்கல் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 5வது முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சட்டசபை கூட்டம் 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது, நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும், தினகரனை சந்தித்து வரும் அதிமுக எம்எல்ஏக்களை சட்டசபையில் எதிர்கொள்வது பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.