சிபிஐ நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது – அலோக் குமார் வர்மா

79

சிபிஐ நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது என அலோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் குமார் வர்மா, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை என அலோக் வர்மா கூறியுள்ளார். சிபிஐ நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது என்று கூறியுள்ள அலோக் வர்மா, சிபிஐ-க்கு களங்கம் ஏற்படாதவாறு, தான் நடந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.