திசை மாறும் புயல் – புதிய அறிவிப்பு

1153

நவம்பர் 15ஆம் தேதி கடலூர் – பாம்பன் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என்பதால், சென்னைக்கு பாதிப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #kajaallert # IndianMeteorologicalDepartment #kajapuyal

நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 850 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கஜா புயல் தெற்கு நோக்கி நகர்வதால், பாம்பன் – கடலூர் இடையே 15ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதனையடுத்து, நாளை மாலையில் இருந்து கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்,

புயல் கரையைக் கடக்கும்போது, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இன்று 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசும் எனவும், அதே சமயம் சென்னைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.