மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

166

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகின்ற 10-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் முன்பதிவுக்காக குவிந்துள்ளனர். அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை நகலைப் பெற்று வருவாய்த்துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு வருகின்ற 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9-ம் தேதி பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் முன்பதிவு நாளை நடைபெறும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.