பாசனத்திற்காக பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது..!

146

பாசனத்திற்காக பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனிடையே ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில் முதல்போக பாசனத்திற்காக பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 120 கன அடி வீதம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் பொள்ளாச்சி பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள சுமார் 6 ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.