இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வரும் வேற்றுகிரகவாசி புகைப்படம் : பிரேசில் போலீசார் வெளியிட்டனர்

973

உலகில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சான்றாக ஒரு புகைப்படைத்தை பிரேசில் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பிரேசில் போலீசார் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில், வேற்று கிரகவாசிகள் இருப்பது போல் தெரிகிறது. இந்த புகைப்படம் பிரேசில் நாட்டின் பெர்குமெட்ர் பகுதியில் எடுக்கப்பட்டது. அப்பகுதியில் விநோதமாக சில நிகழ்வுகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற போலீசார், இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். இதையடுத்து இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தற்போது இந்த புகைப்படத்தை முதன்மையாக எடுத்து கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.