ஜல்லிக்கட்டை முன்னிட்டு, மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு

84

அலங்காநல்லூர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு, நடைபெற்று வரும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17-ந் தேதியும், அவனியாபுரத்தில் வருகின்ற 15-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இரு போட்டியிலும் பங்கேற்க, மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு திருப்பரங்குன்றத்தில் உள்ள பி.எம்.எஸ். பள்ளியில் தொடங்கியது. இதற்காக, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்து வருகின்றனர். தங்கள் புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பித்த இளைஞர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் தகுதி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் பதிவு எண் கொண்ட அனுமதி ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்பதிவையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.