கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி : மெரினா முழுவதும் பலத்த பாதுகாப்பு

375

சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி தலைமையில் பேரணி நடைபெறுவதால் மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார்.. அப்போது தனது பலத்தை செப்டம்பர் 5ம் தேதி நிரூபிப்பேன் என பேட்டியளித்தார். இந்நிலையில் அழகிரி தலைமையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. தாரை தப்பட்டை முழங்க சென்னை திருவல்லிக்கேனி காவல் நிலையம் அருகே பேரணி தொடங்கியது.

வாலாஜா சாலை, கடற்கரை, சாலை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.