இடைத்தேர்தலில் திமுகவிற்கு நான்காம் இடம் தான் கிடைக்கும் – மு.க.அழகிரி

237

தன்னை சேர்க்காவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலி்ல், திமுக 4-வது இடத்திற்குத்தான் செல்லும் என்று மு.க.அழகிரி உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு மு.க. அழகிரி அளித்த சிறப்பு பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். தன்னை சேர்த்துக்கொண்டால், திமுக வலிமை அடையும் என்று அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், திமுகவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் அங்கு போக வாய்ப்புள்ளதாக கூறிய அழகிரி, இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால், யார் அதிக ஓட்டு வாங்குகிறார்களோ அவர்கள்தான் ஜெயிப்பார்கள் என பதிலளித்துள்ளார். மேலும், இறுதியாக நான் ஜெயிப்பேன் என நினைக்கக் கூடாதா? என்று சிரித்தபடி கூறி, அழகிரி தனது பேட்டியை முடித்துள்ளார்.