ஸ்டாலினுக்கு தாம் முன் மொழிய வேண்டுமா? – அழகிரி

625

இடைத் தேர்தல் வந்தால் தங்களின் சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என மு.க. அழகிரி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ஆவேசமான அழகிரி, வேட்பு மனு தாக்கல் செய்ய அவருக்கு தாம் முன் மொழிய வேண்டுமா என்று கடிந்து கொண்டார். மேலும் இடைத் தேர்தல் வந்தால் தங்களின் சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என பதில் அளித்தார்.