கருணாநிதியின் உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் மு.க.அழகிரி..!

569

கருணாநிதியின் உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு அவரது மகன் அழகிரி சாலை மார்க்கமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

ஸ்டாலினுடனான மோதலை தொடர்ந்து திமுகவில் தன்னுடைய செயல்பாட்டினை முழுமையாக நிறுத்திக் கொண்ட கருணாநிதியின் மகன் அழகிரி மதுரையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனிடையே நேற்றிரவு, கருணாநிதியை சந்திப்பதற்காக மதுரையிலிருந்து அழகிரி சாலை மார்க்கமாக சென்னைக்கு புறப்பட்டார். அழகிரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோபாலபுரம் வந்தவுடன் கருணாநிதியின் உடல் நிலை குறித்த முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.