விராட் கோலிக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் கடினம்-முன்னாள் பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் !

549

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பந்துவீசுவது கடினம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பரம எதிரிகளாக கூறப்படும் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஆமிரை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என புகழாரம் சூட்டினர். இந்த நிலையில், விராட் கோலியை புகழ்ந்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் டுவிட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கோலி விளையாடும் போது தான் பந்துவீசாமல் தப்பித்து கொண்டதாக தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு எதிராக பந்துவீசுவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.