அகில இந்திய அளவில் நடைபெற்ற கால் பந்து போட்டியில்,வெற்றி பெற்ற சென்னை அக்கோனஸ் அணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

275

அகில இந்திய அளவில் நடைபெற்ற கால் பந்து போட்டியில்,வெற்றி பெற்ற சென்னை அக்கோனஸ் அணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

திருச்செந்தூர் அருகேயுள்ள நாசரேத்தில், 69வது கனோன் ஆர்த்தர் மர்காசிஸ் நினைவு கால்பந்து போட்டி அகில இந்திய அளவில் நடைபெற்றது. கடந்த 1ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், இந்திய அளவில் 12 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில், சென்னை அக்கோனஸ் அணியும் திருவனந்தபுரம் அக்கோனஸ் ஜெனரல் அணியும் மோதின. இதில், சென்னை அக்கோனஸ் அணி 8க்கு 7 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் பரிசான கனோன் ஆர்த்தர் மர்காசிஸ் நினைவு சுழல் கோப்பை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை அணி தட்டிச் சென்றது.
2வது இடம் பிடித்த திருவனந்தபுரம் அக்கோனஸ் ஜெனரல் அணிக்கு, 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் அனிதா ராதா கிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்