சென்னையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிப்பு..!

167

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 2 ஆயிரத்து 500 போலீசாரும், முக்கிய இடங்களில் என இரண்டாயிரத்து 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிட்டார்.