மோடிக்கு இணையானவர் ராகுல்காந்தி |ஏ.கே.அந்தோணி

108

மோடிக்கு இணையான தலைவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ.கவை தனியாக எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் இன்னும் வலிமை பெறவில்லை என்று கூறினார். இதனால்தான் பா.ஜ.கவை எதிர்க்க மிகப்பெரிய கூட்டணியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.பா.ஜ.கவை வெளியேற்றும் முயற்சிக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிப்பதாகவும், மோடியை எதிர்க்கும் அளவுக்கு ராகுல் பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாகவும், ஏ.கே.அந்தோணி கூறினார்.கேரளாவில் வேட்பாளர்களை கடைசி நேரத்தில் தேர்ந்தெடுப்பதை மாநில தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.