கோழிக்கோடு விமான நிலையத்தில் 45 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சவுதி ரியால் நாணயத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

775

கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இண்டிகோ விமானத்தில் துபாய் செல்லவிருந்த இரண்டு பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அதில், வாழைப்பழங்கள் இடையே பதுக்கி வைத்து, கடத்த முயன்ற, 45 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சவுதி ரியால் நாணயத்தை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், துபாய் செல்லவிருந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.