சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து

145

சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையம் முகலிவாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சுற்றியுள்ள மரம், செடிகளில் தீ பரவியதால் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 25 மேற்பட்ட வீரர்கள் சுமார் நான்கு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.