திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.38 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..!

380

கோலாம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 6.38 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த ரஷீத் உசேன் என்பவரை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த சாம்சங் ஃபோன் ஐபேடில் 6.38 லட்ச ரூபாய் மதிப்பிலான 201 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.