திமுகவில் தற்போதைய கட்சிகளின் கூட்டணி தொடர விருப்பம் : திருமாவளவன்

551

கருணாநிதி அகில இந்திய அளவில் நன்மதிப்பு பெற்ற தலைவர் என்பதால், இரங்கல் கூட்டத்தில் தேசியத் தலைவர்கள் பங்கேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் உடல்நலம் பெற்று மீண்டும் அரசியல் பணி செய்ய வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் நெல்லையில் பங்கேற்க உள்ளதாக கூறிய திருமாவளவன், கருணாநிதி அகில இந்திய அளவில் நன்மதிப்பு பெற்ற தலைவர் என்பதால், இரங்கல் கூட்டத்தில் தேசியத் தலைவர்கள் பங்கேற்பதாக தெரிவித்தார். திமுகவில் தற்போது தோழமையாக உள்ள கட்சிகளின் கூட்டணியே, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.