இந்தியாவில் கடல் முதல் வானம் வரை உள்ள அனைத்துத் துறைகளிலும் இன்று யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

208

சர்வதேச யோகா நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் யோகாசன பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற யோகாசனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமிகள் கலந்துகொண்டனர். இதே போல் தனியார் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானப்பணி பெண்கள் பயணிகளுக்கு யோகாசனம் பயிற்சி அளித்தனர்.