மறைந்த இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உடலுக்கு குடியரசு தலைவர் உள்பட பல்வேறு தரப்பினர் அஞ்சலி..!

416

மறைந்த இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உடலுக்கு குடியரசு தலைவர் உள்பட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற 98 வயதான அர்ஜன் சிங் டெல்லியில் உடல்நில குறைவால் தீடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மூப்படை தளபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது மறைவையொட்டி டெல்லியில் இன்றும், நாளையும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, தூக்கம் அனுசரிக்க அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.