ஏர்செல் – மேக்‍சிஸ் விவகாரத்தில் முடக்‍கப்பட்ட சன் டி.வி. குழுமத்தின் 743 கோடி ரூபாய் சொத்துக்‍களை விடுவிக்‍க முடியாது….

499

ஏர்செல் – மேக்‍சிஸ் விவகாரத்தில் முடக்‍கப்பட்ட சன் டி.வி. குழுமத்தின் 743 கோடி ரூபாய் சொத்துக்‍களை விடுவிக்‍க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் பெறுவதற்காக, அதன் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்‍சிஸ் நிறுவனத்திற்கு வலுக்‍கட்டாயமாக விற்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சன் டி.வி. குழுமத்திற்கு 743 கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்ததாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்‍கில் கலாநிதி மாறன், மற்றும் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்ட நிலையில், சன் டி.வி. குழுமத்தின் 743 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்‍கப் பிரிவு முடக்‍கியிருந்தது. இதனை விடுவிக்‍க கோரி, மாறன் சகோதரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், முடக்கப்பட்ட சொத்துக்‍களை விடுவிக்‍க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், அமலாக்கத்துறை புதிய வழக்கு தொடரவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.