சிக்னல் பிரச்சனைக்கு மாற்று ஏற்பாடாக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து தற்காலிகமாக சேவை வழங்கப்படும் – ஏர்செல் அறிவிப்பு.

1395

சிக்னல் பிரச்சனைக்கு மாற்று ஏற்பாடாக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து தற்காலிகமாக சேவை வழங்கப்படும் என ஏர்செல் அறிவித்துள்ளது.
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஏர்செல் நிறுவனம், செல்போன் கோபுரங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு கடன் பாக்கி வைத்துள்ளது. இதனால் ஏர்செல் கோபுரங்களுக்கு வழங்கி வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டதன், காரணமாக கடந்த 2 நாட்களாக வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சனை நிலவி வருகிறது. சிக்னல் கிடைக்காததால், பல மாவட்டங்களில் ஏர்செல் அலுவலகங்களை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் சிக்னல் பிரச்சனைக்கு மாற்று ஏற்பாடாக, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செல்போன் சேவை வழங்க தற்காலிக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது. கோபுர நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ள ஏர்செல் நிறுவனம், இன்னும் 4 நாட்களில் பிரச்சனை சீராகும் என கூறியுள்ளது.