வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தல் ..!

1297

நெட்வொர்க் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது.
செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல் நிறுவனத்திற்கும் இடையிலான நிதிப் பிரச்சனை காரணமாக அதன் டவர் நிறுவனம் திடீரென இழுத்து மூடியதால் நாடு முழுவதும் கடந்த வாரத்தில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இதனையடுத்து, செல்போன் டவர் நிறுவனத்துடன் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் நெட்வொர்க் பாதிப்பு சீரடைந்து வந்தது. இந்நிலையில் டவர் நிறுவனம் மீண்டும் பிரச்சனையை எழுப்பி வருவதால் நெட்வெர்க் சேவையில் பாதிப்பு ஏற்படும் என ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய சி.இ.ஓ சங்கர நாராயணன், வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே ஏர்செல் நிறுவனம் திவால் என அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 125 ஆயிரத்து 500 கோடி ரூபாய்
கடனை திருப்பி செலுத்த முடியாதததால், திவால் என அறிவிக்கக்கோரி ஏர்செல் நிறுவனம் மனு அளித்துள்ளது.