காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் ஆபூர்வ எந்திரம் ஒன்றை கண்டுபிடித்து ஹைதரபாத் பொறியயல் கல்லூரி மாணவர் ஒருவர் அசத்தியுள்ளார்.

583

காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் ஆபூர்வ எந்திரம் ஒன்றை கண்டுபிடித்து ஹைதரபாத் பொறியயல் கல்லூரி மாணவர் ஒருவர் அசத்தியுள்ளார்.
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து வரும் தண்ணீரை இழுத்து, அதனை வடிகட்டி, சுத்தமான தண்ணீராக தருகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஜாவத் பட்டேல் தான் இதை உருவாக்கியுள்ளார். 22 வயதான ஜாவத் பட்டேல் தண்ணீரை சேமிக்கும் நோக்கில் இந்த எந்திரத்தை தயாரித்துள்ளதாக கூறினார்.இந்த கருவி மூலம் ஒரு மணி நேரத்திற்கு 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் பெற முடியும்.
தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் இந்த கருவி மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஜாவத் பட்டேல் கூறினார்.