வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் செய்ய,100 விமானங்களைக் ஒப்பந்த முறையில் வாங்க உள்ளதாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

207

ஏர் இந்தியா நிறுவனம் வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, ஒப்பந்த முறையில்,100 விமானங்களை
சில வருடங்களுக்கு, குத்தகைக்கு வாங்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த 100 விமானங்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுக்காமல் அடுத்த 4 வருடத்திற்குப் பகுதி வாரியாக வாங்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்பொழுது, ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் 118 விமானங்கள் உள்ளது. இப்புதிய திட்டத்தின் படி வரும் 2020 ம் ஆண்டுக்குள்,
ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் எண்ணிக்கை 232 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.