குஜராத்தில், இந்திய விமானப் படையின் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார்.

ஜாம்நகர் விமானப் படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக ஜாகுவார் ரக ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. சஞ்சய் சவுகான் என்ற விமானி விமானத்தை இயக்கினார். இந்தநிலையில், பெரஜா என்ற கிராமத்தின் திறந்த வெளி வெளிப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானி சஞ்சய் சவுகான் உயிரிழந்தார். விமானம் விழுந்து நொறுங்கிய போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில கால்நடைகளும் உயிரிழந்தன. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.