மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.

மதுரை அருகே உள்ள தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தை சென்னை மற்றும் கேரளாவில் செயல்படும் HLL கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு பார்வையிட்டது. இந்தியா முழுவதும் மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களைக் கட்டக் கூடிய இந்த நிறுவனம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகளை செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.