நாடெங்கும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

1784

நாடெங்கும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கவும், 73 மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு வரை பிரதமர் சுகாதார பாதுகாப்பு திட்டம் 14 ஆயிரத்து 832 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படுவதாக அவர் கூறினார். புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாட்டில் மருத்துவக்கல்வி, பயிற்சியை மாற்றியமைப்பதுடன், மண்டலங்களில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். 20 எய்ம்ஸ் நிறுவனங்களில் 6 ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டதாக கூறிய அவர், புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமாண செலவையும், பராமரிப்பு செலவையும் மத்திய அரசு ஏற்கும் என தெரிவித்தார்.