தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை – மத்திய அரசு

214

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை என மத்திய அரசு குற்றச்சாட்டியுள்ளது.

மத்திய அரசின் உயர்தர மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தோப்பூரில் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதனிடையே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை என மத்திய அரசு குற்றச்சாட்டி உள்ளது. மேலும், மருத்துவமனை கட்டுவதற்கான நிலத்தையும் மாநில அரசு இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், மதுரை தோப்பூரில் 10-ம் தேதி எய்ம்ஸ் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் நிலத்தை ஒப்படைக்கும் பணி தொடங்கும் என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.