சேலத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

சேலம் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போது 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு விவசாயிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திட்டம் குறித்து தெளிவான விளக்கம் ஏதும் தரப்படவில்லை எனவும், பாமர விவசாயிகள் புரிந்துகொள்ளும் வகையில் திட்டம் குறித்து விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இத்திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே உள்ள 4 வழி சாலையை விரிவு படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனிடையே 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிலர் வெளியேறினர்.