காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர் வேண்டுகோள்

222

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என ஐக்கியநாட்டுச் சபை தலைவர் அண்டோனியா குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து பல்வேறு தளங்களில் பதற்றம் நிலவுகிறது. இந்தியா சட்டவிரோதமாக நடந்து கொள்வதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுவதோடு ஐநா சபையின் பாதுகாப்புக்குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்று கூறி வருகிறது. இதனிடையே காஷ்மீர் விவகாரத்தில் இருநாட்டுத் தலைவர்களும் பொறுமை காக்கவேண்டும் என ஐநா தலைவர் அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐநா அவையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்ரிக், கடந்த சிம்லா ஒப்பந்தத்தின் படி ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை அணுகவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பை ஈடுபடுத்தக்கூடாது என்று கூறியிருக்கும் அவர், அ்வவாறு செய்வது ஜம்மு காஷ்மீர் பிர்சனையை நீர்த்துப் போகச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.