ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு முறைகேடு : ஒப்பந்தத்திற்கு எதிராக புதிய மனு தாக்கல்

792

ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், கோடிக்கணக்கனக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன. இதனிடையே, ரபேல் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோன்று வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவரும் புதிதாக பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் தற்போது வாங்கும் விலை போன்றவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தெரிவித்தனர். அதன்படி, ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.