ஆப்பிரிக்கக் கோப்பை கால்பந்துப் போட்டி…!

193

ஆப்பிரிக்க கால்பந்துப் போட்டியில் கோப்பையை வென்ற அல்ஜீரியா அணி வீரர்களுக்குத் தலைநகர் அல்ஜீயர்சில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கான கால்பந்துப் போட்டி எகிப்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அல்ஜீரியா – செனகல் நாட்டு அணிகள் விளையாடின. விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒரு கோல் போட்ட அல்ஜீரியா அணி வெற்றிபெற்றுக் கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அல்ஜீரிய அணி வீரர்கள் கோப்பையுடன் சொந்த நாடு திரும்பினர். தலைநகர் அல்ஜீயர்சில் தெருவெங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடிநின்று தங்கள் நாட்டுக் கால்பந்து அணி வீரர்களை வரவேற்றனர். வென்றுவந்த கோப்பையை மக்களுக்குக் காட்டி அல்ஜீரிய அணி வீரர்கள் மகிழ்ந்தனர்.