ஆப்கானில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்..!

2006

ஆப்கானில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள அப்துல்லா சதுக்கத்தின் அருகே தேசிய பாதுகாப்பு இயக்குனரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது இன்று காலை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.