ஆப்கானிஸ்தான் தற்கொலைபடையினர் நடத்திய குண்டு வெடிப்பு 12 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்…!

360

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படையினரால் நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இன்று காலை தற்கொலை படையை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரினை பொதுமக்கள் மீது மோத செய்தான். இந்த விபத்தில் காரில் இருந்த குண்டுகள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் குறித்து காபூல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.