ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்… பத்துக்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழப்பு

86

ஆப்கனில் உள்ள கந்தகாரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியாயினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் கவர்னர் வீட்டின் அருகே பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது உள்ளிட்டவர்கள் கவர்னர் வீட்டிற்கு வந்தபோது இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் அப்பகுதியில் நின்றிருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் யு.ஏ.இ. தூதர் அல் கபி காயமடைந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆப்கன் தலைநகர் காபூலில், தலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காபூல் தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.