ஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..!

206

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தற்கொலை தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இரவு ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. அப்போது அங்கு மறைந்திருந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் உள்ளிட்ட 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு படையினரும், போலீசாரும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவத்தனர்.

இந்ததிருமண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக குண்டுவெடிப்பில் தப்பியவர் தெரிவித்தார்.