ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் பலி ..!

3734

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் பலியாகினர்.
காஸ்னி மாகாணத்தில் இரவு நேரத்தில் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கவர்னர், உளவுத்துறை இயக்குநர் உட்பட ராணுவத்தினர் 18 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 25 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.