ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியாகினர்.

3079

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியாகினர்.
தலைநகர் காபூலின் டாஷ்த்-இ-பார்சி பகுதியில் உள்ள வாக்காளர் மையம் ஒன்றில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த மையத்தின்மீது பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 31 பேர் உடல் சிதறி பலியாகினர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.