ஆப்கானிஸ்தான் அரசின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்காமல் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி ..!

186

ஆப்கானிஸ்தானில் அரசின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்காமல் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும் தாலிபானுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இருதரப்பினரும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இதற்கு பொதுமக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து மேலும் 10 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. ஆனால் இதனை ஏற்காமல் பட்கிஸ் மாகாணத்தில் உள்ள அரசு படை முகாம்கள் மீது தாலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேர் உயிரிழந்தனர்.