ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 11 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

272

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 11 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மற்றும் லக்மேன் மாகாணங்களில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் இரண்டு வான்வெளி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தலிபான்கள் தீவிரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 5 மோட்டார் வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறியுள்ளது. அதேபோல், மற்றொரு தாக்குதல் லக்மேன் மாகாணத்தின் அலிங்கர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது என்றும் இந்த தாக்குதலில் தலிபான்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.