அதிமுகவின் இருஅணிகளும் கண்டிப்பாக இணையும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!

404

அதிமுகவின் இருஅணிகளும் கண்டிப்பாக இணையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் நடைபெறவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் கண்டிப்பாக இணையும் என்று செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். இதனிடையே, மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, மத்திய அரசு கொண்டு வரும் எந்த பொதுத்தேர்வையும் எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.