அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

256

அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவை மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும், அதிமுக சின்னத்தையும், கட்சியையும், ஆட்சியையும் காப்பது தங்கள் கடமை என்று கூறினார். கட்சியின் தலைமை தற்போது யாரிடம் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்த தம்பிதுரை, அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கூறினார்.