அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் ராமநாதபுரத்தில் இன்று மாலை பொதுக்கூட்டம்…

193

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் ராமநாதபுரத்தில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், கே.பி. முனுசாமி, செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவிற்காக கீழக்கரை சாலையில் மிக பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கான ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் ராமநாதபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.