அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு உதவி செய்வது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்-மு.க.ஸ்டாலின்!

339

பெரும்பான்மை இல்லாத அரசு நீடிக்கும் வகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றுள்ளதால், அமைச்சரவை பெரும்பான்மை இழந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெளிப்படையாக தெரிவதாக கூறியுள்ளார்.
ஆனால், அது அதிமுக உட்கட்சி விவகாரம் என கூறுவது சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உலைவைக்கும் கேலிக் கூத்து என தெரிவித்துள்ள அவர்,
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட எதிர்க்கட்சிகளின் சார்பில் கோரிக்கை வைத்தும், ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டவிரோத அரசுக்கு ஆதரவு அளிப்பது போல் அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையை இழந்த அரசுக்கு மத்திய பாஜக அரசு உதவி செய்வது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.