அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம் – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்!

364

அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இதுவரை தி.மு.க. கொண்டு வந்ததில்லை என தெரிவித்தார். முன்பு நடந்தது, நம்பிக்கை வாக்கெடுப்பு என்பதை மறந்து முதலமைச்சர் பழனிச்சாமி பேசுவதாக அவர் குறிப்பிட்டார். அ.தி.மு.க. அடிபணிந்து போவதற்கு பா.ஜ.க. வே காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.