அதிமுக எம்எல்ஏ-க்கள் நாளை சென்னை வர முதலமைச்சர் உத்தரவு!

501

அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் நாளை சென்னை வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். கவர்னரிடம் மனு அளித்த அவர்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரையும் சென்னை வர உத்தரவிட்டுள்ளார். திங்கட்கிழமை அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் பலர் கலந்து கொள்ளவில்லை. மேலும் தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்கள் தங்களது ஆதரவை திரும்ப பெறுவதாக, ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏ-களும் கலந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்களுடன் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.